கிரிக்கெட் தொடர் ஒன்றில் 4 சதங்கள் அடித்து ரோஹித் ஷர்மா சாதனை

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஒன்றில் 4 சதங்கள் அடித்து ரோஹித் ஷர்மா சாதனை. ரோஹித் ஷர்மா வங்க தேசத்துக்கு எதிரான போட்டியில் 4 சதம் அடித்துள்ளார். நடப்பு தொடரில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக ரோஹித் ஷர்மா ஏற்கனவே சதம் அடித்து இருந்தார்.இந்த நிலையில் இன்றைய போட்டியிலும் அவர் சதம் அடித்து இருக்கிறார். இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்த தொடரில் இது வரை 440 ரன்கள் எடுத்து இருந்தார்.

 

தற்போது சதம் விளாசி அசத்தி இருக்கிறார். இலங்கையின் சங்ககாரா ஒரே தொடரில் 4 சதங்கள் அடித்துள்ளதை ரோஹித் ஷர்மா தற்போது வீழ்த்தியுள்ளார். 90 பந்துகளை சந்தித்த ரோஹித் ஷர்மா 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் விளாசினார். நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் கூட அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக சதம் அடித்தார். வங்க தேசத்துக்கு எதிரான போட்டியிலும் சதம் அடித்துள்ளார். இந்திய அணியின் தொடக்க வீரராக இருக்கும் ரோஹித் ஷர்மா, தொடர்ச்சியாக தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.


Leave a Reply