ஆளுநராக இருந்துக்கொண்டு கிரண்பேடி தரம் தாழ்ந்த வேலையை செய்து வருவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது,அவர் கிரண்பேடி தமிழக அரசியல் தலைவர்கள் ஊழல் பேர்வழிகள், மக்களும் சம்மந்தப்பட்டிருப்பதாக பற்றிய கருத்து தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் மட்டும் இல்லை கர்நாடக, மஹாராஷ்டிரா, தெலுங்கானா என பல மாநிலங்களில் நீர் பற்றாக்குறை மழையின்மையால் ஏற்பட்டுள்ளது.

 

சில மாநிலங்களில் திறம்பட கையாளப்பட்டு உள்ளது, சில மாநிலங்களில் தாமதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு அந்த பணிக்கு உதவ வேண்டும். புதுச்சேரியில் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும்,கிரண்பேடி அரசியல் தலைவர்கள், மக்களை அவமானப்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு அருகதை கிடையாது, தேவையும் இல்லை. தேவையில்லாமல் மற்ற மாநில விவகாரங்களில் தலையிட்டு, அவரே அவப்பெயரை பெற்று கொண்டுள்ளார்.

 

எந்தவித ஆதாராமும் இல்லாமல் அரசியல் தலைவர்கள், மக்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.எப்போதும் விளம்பரத்தில் இருக்கவே விரும்புவார். மற்றவர்கள் சொல்வதை அவர் கவனிப்பது இல்லை.புதுச்சேரியிலும் இதுபோன்ற சம்பவத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வேண்டுமென்றே தொல்லை கொடுப்பதற்காக மோடி கிரன்பேடியை நியமித்துள்ளதாக தெரிகிறது.ஆளுனராக இருந்துக்கொண்டு தரம் தாழ்ந்த வேலையை செய்து வருகிறார்.மக்கள் எப்போது பொங்கி எழ வேண்டுமோ அப்போது பொங்கி எழுவார்கள் என்றும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.


Leave a Reply