விஜய் சேதுபதியை மாஸ் ஹீரோவாக ஏற்க மறுக்கிறார்களா ரசிகர்கள்?

Publish by: --- Photo :


நகைச்சுவையாக சினிமாத்தனம் ஏதும் இல்லாமல் சராசரி மனிதன் போல திரையில் தோன்றி நடிக்கும் நடிகர்கள் திடீரென சூரர்கள் போல் நடிக்க ஆரம்பித்தால் ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா? இந்த சினிமா சிக்கலில் சிக்கி இருக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தற்போது வெளிவந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சிந்துபாத் திரைப்படம் ரசிகர்களிடம் போதுமான வரவேற்பை பெறவில்லை என ஆதங்கம் தெரிவிக்கின்றனர் ரசிகர்கள்.

 

சாதாரண மக்களின் பிம்பங்களை பிரதிபலிக்கும் வசனங்களை பேசி, நடித்து தனக்கு என ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி. தொடர்ச்சியாக சிறந்த கதை அம்சம் உள்ள படங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். ரசிகர்களிடம் தனி மதிப்பு பெற்று இருப்பதோடு தயாரிப்பாளர்களிடமும் விஜய் சேதுபதிக்கு நல்ல பெயர் இருக்கிறது.

 

டேரக்டர்களின் நடிகர் என்ற பட்டம் விஜய் சேதுபதிக்கு கிடைத்தது. திரைத்துறையின் நிர்பந்தகளால் மாஸ் ஹீரோக்களை போல் நடிகர் விஜய் சேதுபதியும் சில படங்களில் நடித்தார். தடாலடி சண்டை காட்சிகள் ,நம்ப முடியாத சாகசங்கள் கொண்ட அந்த படங்களை ரசிகர்கள் ஏற்று கொள்ளவில்லை என்றே திரை விமர்சனர்கள் கருதுகின்றனர்.

 

எப்போதுமே கலை அம்சத்துடன் விருதுக்கான படங்களில் மட்டுமே நடித்து கொண்டிருக்க முடியாது என்று கூறும் திரை உலக விமர்சகர்கள் வெகு ஜனத்தை கவரும் வகையில் நடித்தால் தான் திரைத்துறையில் நீடிக்க முடியும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். அதே சமயம் ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியும் அளவிற்கு சண்டை காட்சிகள் கொண்ட விஜய் சேதுபதி நடித்த மாஸ் ஹீரோ சப்ஜக்ட் படங்களான விக்ரம் வேதா, சேதுபதி போன்ற படங்கள் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்துள்ளன என்றும் விமர்சகர்கள் சுட்டி காட்டியுள்ளனர்.

 

மாஸ் திரைப்படங்களை தேர்வு செய்வதற்கு பதிலாக காதலும் கடந்து போகும் , பீட்சா, நானும் ரௌடி தான் , இதற்கு தான் ஆசைபட்டாய் பாலகுமாரா போன்ற ரசிகர்களுக்கு நெருக்கமான திரைப்படங்களை தேர்வு செய்து நடித்தால் விஜய் சேதுபதியின் ரசிகர் வட்டம் தொடர்ந்து அதிகரிக்கும்.


Leave a Reply