மதுரையில் கொரியர் கொள்ளையர்கள்… சிக்கியது எப்படி?

மதுரையில் கொரியர் கொடுப்பது போன்று நடித்து தொழிலதிபர் வீட்டில் 46 சவரன் நகை மற்றும் 32 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் கடந்த 27 ஆம் தேதி மதியம் வெற்றிவேல் என்பவரின் வீட்டிற்கு கொரியர் கொடுப்பது போல 2 மர்ம நபர்கள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்து இருக்கிறார்கள்.

 

அப்போது அவர்கள் வீட்டில் இருந்த வெற்றிவேல் மற்றும் அவரது மனைவி மற்றும் மருமகள் ஆகிய மூன்று பேரின் மீதும் மிளகாய் பொடியை தூவி அவர்களை கட்டிப்போட்டு அவரின் வீட்டில் இருந்த 46 சவரன் தங்க நகை மற்றும் 32 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட் நான்கு தனிப்படைகளை அமைத்து இருந்தார்.

 

அதன்படி மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர்.  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தனியார் விடுதியில் தங்கி இருந்த தினேஷ் மற்றும் ஜஸ்டின் ஆகிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்து இருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வெற்றிவேல் என்பவரின் மகனுடைய 2 மகள்கள் படிக்கும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிய வீரக்குமார் என்பவர் மதுரையில் உள்ள தனியார் பிரபல பள்ளியில் பணியாற்றி வந்துள்ளார்.

 

அவருக்கும் அந்த குடும்பத்திற்கும் ஏற்பட்டிருந்த நல்ல உறவை பயன்படுத்தி கொண்டு யார் யார் வீட்டில் செல்வா செழிப்பாக இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அவர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி அவர்கள் வீட்டில் உள்ள பணத்தை கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் அவர்களது கொள்ளைக்கு தலைமையாக செயல்பட்ட உடற்கல்வி ஆசிரியர் வீரக்குமார் என்பது அவர்கள் கூறியதன் அடிப்படையில், தினேஷ் ஜஸ்டின் ஆகியோர் வெற்றிவேல் வீட்டிற்கு சென்று கொள்ளை அடித்தது தெரிய வந்துள்ளது. வீரக்குமார், தினேஷ், ஜஸ்டின் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 46 சவரன் நகை, கொள்ளை அடிக்கப்பட்ட 32 லட்சத்தில் 30 லட்சம் ரொக்க பணத்தையும் போலீசார் மீட்டுள்ளனர்.


Leave a Reply