திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் பாரதி ராஜா திடீர் ராஜினாமா ! பின்னணி

திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் பதவியிலிருந்து பாரதி ராஜா திடீரென விலகி இருக்கிறார். கடந்த மாதம் நடைபெற்ற இயக்குனர் சங்க பொதுக்குழுவில் தலைவர் பதவிக்கு பாரதி ராஜா ஒரு மனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். இயக்குனர் சங்க பொது செயலாளர், பொருளாளர்,துணை தலைவர்கள், இணை செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு ஜூலை 14 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. சங்கத்தில் உள்ள இரண்டாயிரத்து எழுநூறு உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

 

இந்நிலையில் தேர்தல் நடத்தாமல் பாரதி ராஜாவை தேர்வு செய்ததற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனையடுத்து, தேர்தலில் போட்டியிடாமல் பதவிக்கு தேர்ந்து எடுக்கபட்டால் ஏற்படும் சங்கடங்களை தான் உணர்ந்து இருப்பதாக கூறிய பாரதி ராஜா, ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்து எடுக்க வசதியாக தான் பதவி விலகுவதாக கூறியிருக்கிறார். வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் ஜூலை 14 ஆம் தேதி இயக்குனர் சங்க தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.


Leave a Reply