போலீஸ் விசாரணையும்! கையில் மாவுக்கட்டும்

சென்னை மாநகர காவல் துறையினரிடம் சிக்குபவர்கள் விசாரணைக்கு பிறகு உடைந்த கைக்கு கட்டுப்போடும் நிலமைக்கு தான் ஆளாகின்றனர். இது போன்று ஒன்று இரண்டு அல்ல.குற்ற வழக்கில் மாட்டுகின்ற அனைவருக்கும் மாவுக்கட்டு என்பது தவிர்க்க முடியாததாக ஆகி வருகிறது.சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த வாரம் குடி போதையில் காரை ஒட்டி விபத்தை ஏற்படுத்தியவர் நவீன்.

 

இவரை கைது செய்யவே போலீஸ் படாதபாடு பட்டனர்.கைது செய்யபட்ட போது நல்ல நிலமையில் இருந்தநவீன் விசாரணைக்கு சென்று வந்த போது வலது கையில் கட்டுடன் காணப்பட்டார். கை கட்டுடன் நவீன் சிறைக்கு அனுப்பப்பட்டார். இன்னொருவர் திருமுல்லைவாயிலில் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யபட்ட சுந்தரம். ராணுவ வீரர் சுந்தரமும் நீதிமன்றத்தில் ஆஜராகும் போது மாவுக்கட்டுடன் இருந்தார்.

 

இப்படி காவல் துறையினரால் கைது செய்யபட்ட பிறகு இவர்களது கை மட்டும் உடைபடுவது ஏன்? அரும்பாக்கத்தில் கஞ்சா வியாபாராத்தில் ஏற்பட்ட மோதலில் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யபட்ட 4 பேரில் இருவர் போலீஸ் விசாரணைக்கு பிறகு மாவுக்கட்டு போட்டு கொண்டு தான் வந்தனர்.சென்னையில் பல இடங்களில் சங்கிலி பறிப்பு வழக்கில் கடந்த வாரம் ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

 

இவரையும் போலீஸ் விசாரணை செய்து அனுப்பிய போது முறிந்த கைக்கு மாவுக்கட்டு போட்டு கொண்டு தான் வந்தார். இவர்கள் மட்டுமல்ல நல்ல நிலமையில் பிடிபடுகிற நபர்களுமே உடைந்த கைக்கு கட்டுபோட்ட படம் தான் வெளியானது. இப்படி உடைபடுகிற கைகள் பிறகு முழுமையாக செயல்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply