சுதந்திரமான டிஜிட்டல் டேட்டா பரிமாற்றத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு

ஜி 20 மாநாட்டில் முன் வைக்கப்பட்ட உலக நாடுகளுக்கு இடையே சுந்தந்திரமான டிஜிட்டல் டேட்டா பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்துள்ளது. ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபே அறிமுகம் செய்து வைத்த ஒசாகா ராக் ஒப்பந்தத்தில் அமெரிக்க, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 24 நாடுகள் கையெழுத்திட்டு உள்ளன. இந்தியா, இந்தோனேஷியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இந்த கூட்டத்தை புறக்கணித்து விட்டன. வளர்ச்சி அடைந்த நாடுகள் டிஜிட்டல் டேட்டாக்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும் என்று ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

ஜி 20 மாநாட்டில் இரண்டாவது நாளான இன்று பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் மாநாட்டு அரங்கிற்கு செல்லும் முன் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசிய அதிபரை சந்தித்து பேசினார். அப்போது இருவரும் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.


Leave a Reply