தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட 6 வது மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் ஆ.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் கி.சோமசுந்தரம் அறிக்கை வாசித்தார். ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது சிறை சென்ற ஏ.பரமசிவம், கே.நடராஜன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாநில பொருளாளர் மா.விஜய பாஸ்கர் கூறியதாவது: தமிழக உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை தாமதிக்காமல் அரசு நிறைவேற்ற வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் மாநில நிர்வாக முடிவின்படி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.