யு‌ஜி‌சியில் தகுதி பெறாத ஆசிரியர்கள் பணியாற்றினால்,படிப்புக்கான அங்கீகாரம் ரத்து: காமராஜர் பல்கலைக்கழகம்

யு‌ஜி‌சி தகுதி பெறாத ஆசிரியர்கள் பணியாற்றினால் படிப்புக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அறிக்கை அனுப்பியுள்ளது. தகுதி இல்லாத ஆசிரியர்கள் நடத்தும் படிப்பில் மாணவர்களுக்கான பட்டமும் தரப்படாது என்றும் கல்லூரிகளுக்கு காமராஜர் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

 

மேலும் யு‌ஜி‌சியின் 2018 விதிகளின் படி பி‌எச்‌டி அல்லது நெட்,செட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதத்திலேயே இது போன்ற சுற்றறிக்கையை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மற்றும் அதன் கீழ் செயல்படும் அஃப்ளியேட்டடு கல்லூரி என்று சொல்லப்பட கூடிய தனியார் கல்லூரிகள் , இணைப்பு கல்லூரிகளுக்கு இது போன்ற சுற்றறிக்கை அனுப்பபட்டு இருந்தது.

 

யு‌ஜி‌சி 2018 ஆம் ஆண்டு விதிகளின் படி பி‌எச்‌டி முடித்து இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்கள் நெட் அல்லது செட் தேர்வில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். இரண்டு தகுதியும் இல்லாதவர்கள் பணியாற்றினால் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கபட வேண்டும் என்ற சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டு இருந்தது. நீதிமன்ற வழக்கு வருகிறது என்பதன் காரணமாக அது குறித்த மேல் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.

 

ஆனால் அந்த வழக்கில் தீர்ப்பு வராத பட்சத்தில் தற்போது காமராஜர் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. உங்கள் துறைகளில் தகுதி பெறாத ஆசிரியர்களை கொண்டு நடத்த பெறும் துறைகளுக்கான அங்கீகாரம் என்பது திரும்ப பெறப்படும் என தெரிவித்து இருக்கிறார்கள். அந்த படிப்பில் பயிலும் மாணவர்களின் பெயர்கள் பட்டம் வழங்குவதற்கு பதிவு செய்யப்படாது என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.


Leave a Reply