கிரிக்கெட் அணியின் சீருடை மாற்றத்திற்கும் , பாஜகவுக்கும் தொடர்பா?

இந்திய கிரிக்கெட் அணியின் சீருடை மாற்றத்திற்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். சென்னை தியாகராயன் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் , இந்திய கிரிக்கெட் அணியின் சீருடை மாற்றத்திற்கும், பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாஜக வின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். உலகம் முழுவதும் காவி பரவிவிட்டதா என்றும், உடனே பாஜகவின் வண்ணம் என்று கூறி விடுவீர்களா? எனவும் வானவில் இல் கூட தான் அந்த வண்ணம் இருக்கிறது என்றும், விட்டால் அதிலிருந்தும் நீக்க சொல்வீர்களா என்றும் நகைச்சுவையுடன் வினவினார். இவை எல்லாவற்றிற்கும் பாஜகவை இணைப்பது வேடிக்கை அளிப்பதாக கூறினார்.


Leave a Reply