டோண்ட் கேரி கேஷ்…போலீசாரிடமும் வந்தாச்சு ஸ்வைப்பிங் மெஷின்..பைன் அமெளண்ட ஸ்பாட்லேயே கட்டிக்கலாம்..

Publish by: --- Photo :


தமிழக காவல் துறையில் சட்டம்- ஒழுங்கு,குற்றம் மற்றும் போக்குவரத்து என மூன்று முக்கிய பிரிவுகள் இயங்கி வருகிறது.இதில் சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரிவு காவல் துறையிறையினர் போக்குவரத்தை சீர் செய்வதுடன் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அபராதம் விதித்து அதனை மாவட்ட காவல் அலுவலகங்களில் கட்டி வருகின்றனர்.இதனை எளிமையாக்கும் விதமாக சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் அபராதத்தை சம்பவ இடத்திலேயே பணமாக பெற்று ரசீது கொடுத்து வந்தனர்.

 

இந்த முறையை மேலும் எளிமைப்படுத்தவும்,கணினி மயப்படுத்தவும் காவல் துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக தமிழக காவல் துறை,பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து சம்பவ இடத்திலேயே அபராதம் வசூலிக்கும் வகையில் 750 ஸ்பாட் பைன் விதிக்கும் மின்னணு இயந்திரங்கள் POS(Point of sale) காவல் துறை தலைமை அலுவலகம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் இனி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர் ஸ்பாட் பைன் தொகையை தனது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் மூலம் கட்டிக்கொள்ளலாம்.பர்சில் பணம் தேவையில் ஏ.டி.எம் அல்லது கிரெடிட் கார்டு இருந்தால் போதும்.மேலும், https://echallan.parivahan.gov.in என்ற இணைய தளத்தின் வாயிலாகவும் கட்டிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதனை பயன்படுத்தி தொடர்ந்து போக்கு விதிமீறலில் ஈடுபடுவோரை கண்டறிய இயலும்.

இதற்காக காவல் துறை தலைமை அலுவலகத்தில் போக்குவரத்து ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு கடந்த 24-06-19 அன்று சிறப்பு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக இன்று கோவை சரகத்தில் காவல் துறை துணைத்தலைவர் கார்த்திக்கேயன் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.தமிழக காவல் துறை இயக்குநர் உத்தரவின் படி கோவைக்கு வழங்க மின்னணு பணம் பெறும் 119 இயந்திரங களில் கோவை மாநகருக்கு 32,திருப்பூர் மாநகருக்கு 4,கோவை புறநகர் மாவட்டதிற்கு 14,ஈரோடு மாவட்டத்திற்கு 30,நீலகிரி மாவட்டத்திற்கு 12,திருப்பூர் புறநகர் மாவட்டத்திற்கு 32 என பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

 

இனி வரும் காலங்களில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர் பணம் இல்லை என்று சொல்லி தப்பிக்க முடியாது.ஏ.டி.எம் அல்லது கிரெடிட் கார்டு இருந்தாலே அபராத தொகையினை வசூலிக்க முடியும்.இதனால் ரசீது வழங்காமல் பணத்தை மற்றும் பெற்று கொள்ளும் காவல் துறையில் உள்ள தவறான சிலரால் தவறுகள் நடக்க வாய்ப்புகள் குறைவு.அபராத த்தொகை எவ்வளவோ அந்தளவிற்கான பணத்தை மட்டுமே பெற இயலும் என நம்பப்படுகிறது.


Leave a Reply