பயங்கரவாதத்தை தடுக்க உலக நாடுகள் முன் வர வேண்டும்! ஜப்பானில் பிரதமர் மோடி

பயங்கரவாதம் மனித குலத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும், பயங்கரவாத இனவெறி தாக்குதலை தடுக்க உலக நாடுகள் முன் வர வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜி20 யில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி , சீன அதிபர் என சர்வதேச தலைவர்களும் ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் குவிந்து உள்ளனர்.

 

ஜி 20 மாநாட்டின் ஒரு பகுதியாக பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பிரேசில் அதிபர் , ரஷியா ஆதிபர், இந்திய பிரதமர், சீன அதிபர், தென்னாப்ரிக்க அதிபர் ஆகியோர் பங்கேற்ற முக்கிய ஆலோசனை நடத்தினர். இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

 

அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரியை இந்தியா குறைக்க வேண்டும் என டிரம்ப் எச்சரித்த நிலையில் இது தொடர்பாக இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரிகிறது. இது தவிர பாதுகாப்பு துறை , 5 ஜி சேவை, ஈரானிலிருந்து கச்சா எண்ணெய்க்கு தடை விதித்த விவகாரம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

 

இதை தொடர்ந்து பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் மற்றும் ஜப்பான் பிரதமர் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தையும் நடைபெற்றுள்ளது. அப்போது பேசிய மோடி ஜப்பான் , அமெரிக்கா மற்றும் இந்தியா இணைந்தால் ஆங்கில வார்த்தையில் ஜெய் என்று வரும் என்றும் அது வெற்றியை குறிக்கும் சொல் என்றும் புகழ்ந்தார்.

 

பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் கூட்டமைப்பில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி பயங்கரவாதம் மனித குலத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும் என்று கூறினார். பயங்கரவாதம் அப்பாவி மக்களின் உயிர்களை பறிப்பதோடு பொருளாதார முன்னேற்றத்தையும் தடுக்கிறது என தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து செயல் பட வேண்டும் எனவும் கூறினார்.

 

புதுபிக்கதக்க எரிசக்தி திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் கூறிய மோடி பொருளாதார வளர்ச்சிக்கு கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவை குறைந்த விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதை தொடர்ந்து ரஷியா, இந்தியா, சீனா ஆகிய 3 நாட்டு தலைவர்கள் பங்கேற்ற பிரிக்ஸ் கூட்டத்திலும் மோடி பங்கேற்று பேசினார்.


Leave a Reply