விஷ வண்டு கடித்து மாணவன் பலி !

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே புழுதிகுளம் சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் தூவல் அரசு மருத்துவமனை வாகன தற்காலிக ஓட்டுநராகவும், ஊர்க்காவல் படை வீரராகவும் உள்ளார். இவரது மகன் தர்ஷன். இரண்டாம் வகுப்பு மாணவன். இன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது, வழியில் தர்ஷனை விஷ வண்டு கடித்துள்ளது. இது குறித்து தர்ஷன் பெற்றோரிடம் தெரிவித்தான். தூவல் அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவிக்கு பிறகு, பரமக்குடி மருத்துவமனை கொண்டு சென்றனர்.

 

மயங்கிய நிலையில் இருந்த தர்ஷனை மேல்சிகிச்சைக்காக, இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். தர்ஷனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்து விட்டதாக கூறினார்கள். இதனால் ஆவேசமடைந்த தர்ஷனின் தந்தை பாலமுருகன், மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு சாலையில் அமர்ந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Leave a Reply