மெட்ரோ ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

மெட்ரோ ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே போல் மின்சார ரயிலில் முதல் வகுப்பில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சென்னை மாநகரின் போக்குவரத்தில் மின்சார ரயில்களின் பங்கு மிக பெரியது. அந்த வழித்தடத்தோடு இணைந்தும், புதிய வழித்தடங்களிலும் தனது சேவையை கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது மெட்ரோ ரயில்.

 

தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு 15,000 வரை இருந்த பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 90,000 வரை அதிகரித்துள்ளது. மெட்ரோவில் கிடைக்கும் குளுகுளு வசதியும், கூட்ட நெரிசல் இல்லாத சூழலுமே இதற்கு முக்கிய காரணம். அதே நேரத்தில் மின்சார ரயிலில் முதல் வகுப்பில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது.

 

கடந்த 2018 மார்ச் மாதம் தொடங்கி ஓராண்டில் நாளொன்றுக்கு மின்சார ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை 40,000 பேர் வரை குறைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான நிலையம் சென்ட்ரல் இடையே பயணிப்பவர்களே மின்சார ரயில் சேவையிலிருந்து மெட்ரோ ரயில் சேவைக்கு மாறியுள்ளனர்.

 

கூடுதல் வசதி காரணமாக மின்சார ரயிலில் இருந்து மெட்ரோ ரயிலுக்கு பயணிகள் மாறுவது உண்மைதான் என்று கூறும் ரயில் பயணிகள் சங்கத்தினர் ரயில்களின் முதல் வகுப்பு கட்டணத்தை விட மெட்ரோவில் கட்டணம் குறைவு தான் என்றும் தெரிவிக்கின்றனர். சுற்றுசூழல் மாசு, வாகன நெரிசலை குறைப்பதற்கான பெரும் முயற்சியாக மெட்ரோ ரயிலும், மின்சார ரயிலும் உள்ளது. பயணிகளின் எண்ணிக்கையில் இவை போட்டியிட தொடங்கி இருப்பது ஒரு நல்ல தொடக்கமே.


Leave a Reply