உலகின் மிகுந்த செல்வாக்கு மிகுந்த நபர் நரேந்திர மோடி: கருத்துக்கணிப்பில் மோடி

உலகின் மிகவும் செல்வாக்கு மிகுந்த நபராக இந்திய பிரதமர் நரேந்தர மோடியை பிரிட்டிஷ் ஹெரால்ட் இதழின் வாசகர்கள் தேர்ந்து எடுத்து உள்ளனர். உலகின் செல்வாக்கு மிகுந்த நபர் என்ற கருத்து கணிப்பை பிரிட்டிஷ் ஹெரால்ட் இதழ் நடத்தியது. அதில் ரஷிய அதிபர் புடின், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனா அதிபர் பிஜின் பிங், பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலகின் 25 முக்கிய தலைவர்கள் இடம் பெற்று இருந்தனர்.

 

கருத்து கணிப்பு தொடர்பாக கடந்த 16 ஆம் தேதியன்று வாக்கெடுப்பு நடந்தது. ஒருவர் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும் என கட்டுபாடுகளுடன் நடந்த வாக்கு பதிவில் பிரதமர் மோடி 30.9 சதவீதம் வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். புடினுக்கு 29.9 சதவீத வாக்குகளும்,டிரம்புக்கு 21.9 சதவீத வாக்குகளும் கிடைத்தன. உலகின் செல்வாக்கு மிகுந்த நபர் என தேர்ந்து எடுக்கபட்டதால் ஜூலை 15 ஆம் தேதி வெளியாகும் பிரிட்ஷ் ஹெரால்ட் இதழின் அட்டை படத்தில் மோடி இடம் பெறுவார்.


Leave a Reply