உலக கோப்பை தொடரிலிருந்து ஷிக்கர் தவான் விலகல்-பி‌சி‌சி‌ஐ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிக்கர் தவான் காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் காயமடைந்த ஷிக்கர் தவான் 3 போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தவானை பரிசோதித்த மருத்துவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் அவர் குணமடைய வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்கள்.

 

அதனால் அவர் உலககோப்பை தொடர் முழுவதிலுமிருந்து நீக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் உள்ள ரிஷப் பந்த் அணியினருடன் இணைந்து கொள்வார் என பி‌சி‌சி‌ஐ தெரிவித்துள்ளது.


Leave a Reply