அரசு மருத்துவமனைகளில் குடிநீர் தேவையை அரசு உறுதிப்படுத்தும்: அமைச்சர் விஜய பாஸ்கர்

Publish by: --- Photo :


தமிழக மருத்துவமனைகளில் குடிநீர் பிரச்சனை ஏற்படாத வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புற்று நோய் வலிநிவாரணம் மற்றும் ஆதரவு மையத்தை அவர் தொடங்கி வைத்தார். நாட்டிலேயே முதன் முறையாக புற்றுநோயை கண்டறியும் அதிநவீன கருவிகள் தமிழகத்தில் 10 இடங்களில் நிறுவப்பட்டுள்ளதாக கூறினார். தமிழக மருத்துவமனைகளில் குடிநீர் பற்றாக்குறை ஏதும் இல்லை எனக்கூறிய அவர் குடிநீர் தேவையை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதி அளித்தார்.


Leave a Reply