நாட்டுக்குள் திரும்ப முடியாது! சர்பிராஸ் எச்சரிக்கை

Publish by: --- Photo :


உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி மான்செஸ்டரில் கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதுவரை நடைபெற்ற உலககோப்பை தொடரில் தொடர்ச்சியாக 7 வது முறையாக பாகிஸ்தான் அணியை இந்தியா அணி தோற்கடித்துள்ளது.

 

இதன் மூலம் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் தோல்வியையே சந்தித்தது இல்லை என்ற இடத்தை தக்கவைத்துள்ளது. இதனைதொடர்ந்து பாகிஸ்தானின் தோல்வியை பொறுத்து கொள்ளமுடியாத பாகிஸ்தான் ரசிகர்களும் ,முன்னாள் வீரர்களும் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் கடுமையாக பரப்பி உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் , சக வீரர்களுக்கு கடும் எச்சரிக்கையை விதித்துள்ளான்.

 

அதில், நாம் கடுமையான தோல்வியை சந்தித்து உள்ளோம் என்றும், மீதமுள்ள போட்டிகளில் இவ்வாறு விளையாடினால் கண்டிப்பாக பாகிஸ்தான் ரசிகர்களிடமிருந்து கடும் எதிர்ப்பை சந்திப்போம் என்று எச்சரித்துள்ளார். மோசமான விளையாட்டை விடுத்து விழிப்புடன் விளையாடவும் கூறினார். நாம் அனைவரும் நாடு திரும்ப போகிறோம் என்றும் கூறியுள்ளார்.


Leave a Reply