மக்களவை காங்கிரஸ் தலைவர்-ஆதிர் ரஞ்சன் சௌத்ரி

மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.மேற்கு வங்க மாநிலத்திலிருந்து மக்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட இவர் மக்களவை காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் அவர் ஒரு மனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவராக இருந்த மல்லிகா அர்ஜூன்க்கு  இந்த தேர்தலில் தோல்வி அடைந்ததையடுத்து ஆதிர் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.

 

 

1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது ஆதிர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சராக இருந்தார். மேற்கு வங்கத்தின் காங்கிரஸ் தலைவராகவும், ஆதிர் இருந்து இருக்கிறார். 2 ஆண்டு காலமாக உறுப்பினராக இருக்கும் ஆதிர் 17 வது மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வாகியுள்ளார்.


Leave a Reply