தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை இலவசமாக கற்றுத்தரும் இளைஞர்!

சிலம்பம் என்பது ஒரு தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும்.சொல் வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது.

 

சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன. சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும்.நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவர், தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர். திருவிழா,கோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும்.இக்கலை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி,மதுரை,தேனி மாவட்டங்களில் பெருமளவு நடக்கிறது.

 

வகைகள் :

சிலம்பத்தில் பல வகைகள் உண்டு. அவை
துடுக்காண்டம்,
குறவஞ்சி,
மறக்காணம்,
அலங்காரச்சிலம்பம்,
போர்ச் சிலம்பம்,
பனையேறி மல்லு
நாகதாளி,
நாகசீறல்,
கள்ளன்கம்பு,
நாகம் பதினாறு
ஆகியனவாகும்.

 

கராத்தே என்ற வீர விளையாட்டின் “காட்டா” (kata) என்ற பயிற்சி, சிலம்பத்தின் கதம்பவரிசை ஆகிய இரண்டின் செயல்பாடுகளும் ஒன்றேபோல் இருக்கும்.இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களிலும், இலங்கை , மலேசியா, பிரான்சு, கனடா போன்ற நாடுகளிலும் சிலம்பம் பயிற்றுவிக்கப்படுகிறது.தமிழக அரசு சிலம்பத்தை பள்ளி விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் பட்டயப்படிப்பாக நடத்தப்படுகிறது. பாளையங்கோட்டை தூயசவேரியர் தன்னாட்சி கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தென்பாண்டி தமிழரின் “சிலம்ப வரலாறும் அடிமுறைகளும்’ என்ற நூலை வெளியிட்டுள்ளது.

இத்தகைய சிலம்பக்கலையை தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த சதக்கத்துல்லா என்ற இளைஞர் இக்கலையை வளர்க்கும் விதமாக இலவசமாக கற்றுத்தந்து வருகிறார்.இதில் ஆண்கள்,பெண்கள்,சிறுவர்,சிறுமியர் என ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.இங்குஅலங்காரச்சிலம்பம்,போர்ச்சிலம்பம், நாகம் பதினாறு உள்ளிட்ட வகைகள் கற்றுத்தரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிலம்பக்கலையின் மாஸ்டர் சதக்கத்துல்லா கூறுகையில் தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பக்கலையினை தற்காப்பிற்காகவும்,மன வலிமை,உடல் வலிமையை மேம்படுத்த தான் கற்றுக்கொண்டதாக தெரிவித்த அவர் இக்கலையினை வளர்க்கும் விதமாக பொதுமக்களுக்கு இலவசமாக கற்றுத்தருவதாகவும் தெரிவித்தார்.இதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும் எனவும்,தினந்தோறும் நடைபெறும் பயிற்சியில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து கற்று வருவதாகவும் தெரிவித்தார்.

 

முக்கியமாக சிறுவர்கள் இக்கலையினை கற்றுக்கொண்டால் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு பெரிதும் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.இங்கு பயிற்சி பெறும் மக்கள் மாவட்ட,மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு பெரிய அளவில் சாதனை படைத்து வருவதாகவும் தெரிவித்தார்.ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார்..தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பக்கலையினை வளர்க்கும் விதமாக இலவசமாக கற்றுத்தரும் இளைஞர் சதக்கத்துல்லாவிற்கு ஒரு சல்யூட்…


One thought on “தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை இலவசமாக கற்றுத்தரும் இளைஞர்!

  1. Pingback: Masum

Leave a Reply