தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதி உடைய ஆசிரியர்கள் ஜூன் 15 வரை விண்ணப்பிக்கலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் தற்போது ஜூன் 19 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநகரகம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் வாய்ப்பை பயன்படுத்தி தகுதி உடைய அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் , தலைமை ஆசிரியர்கள் www.mhrd.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் ஏப்ரல் 30 வரை பணியாற்றி இருக்க வேண்டும் என்றும், பணி ஓய்வு பெற்றவர்கள், கல்வி அலுவலக நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்ககூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply