கேரளாவில் பெண் போலீஸ் பட்ட பகலில் எரித்துக் கொலை

கேரள மாநிலம் மாவேளிகாரா மாவட்டத்தில் பட்டப்பகலில் பெண் போலீஸ் எரித்துக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள மாநிலத்தின் மாவேளிகாரா மாவட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வந்தவர் சௌமியா புஷ்கரன்.

 

இவர் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து காரில் வந்த ஒருவர் சௌமியா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்.இதில் நிகழ்விடத்திலேயே சௌமியா உடல் கருகி உயிரிழந்தார்.விசாரணையில் தீ வைத்து கொலுத்திய போக்குவரத்து போலீஸ்காரர் அஜாஸ் என்று தெரிய வந்தது. அவர் ஆலுவாவில் பணியாற்றுவதும் தெரிய வந்தது. அஜாசுக்கும், சௌமியாக்கும் நெருக்கம் இருந்து வந்துள்ளது.

 

சமீபத்தில் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆத்திரத்தில் சௌமியாவை அஜாஸ் கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார். தெரிவித்தனர்.அஜாசும் கடுமையான தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று குழந்தைகளின் தாயான சௌமியாவின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்வதாக தெரிய வந்துள்ளது.


Leave a Reply