முன்னாள் பிரதமர்கள் இடம் பெறாத நாடாளுமன்றம்
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவு அடைந்தது.
இதே போல் முன்னாள் பிரதமர் தேவகௌடா அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தோல்வியை தழுவியதால் அவரால் 17 வது மக்களவையில் இடம் பெற முடியவில்லை. நாடாளுமன்றத்தில் வாஜ்பாய், தேவகௌடா, மன்மோகன்சிங் என தொடர்ந்து முன்னாள் பிரதமர்கள் இருந்து வந்த நிலையில் நீண்ட காலத்திற்கு பிறகு நாடாளுமன்றத்தில் தற்போது முன்னாள் பிரதமர்கள் இல்லாத நிலைஏற்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




