களத்தில் இறங்கி அட்டகாசமாகப் பந்துவீசி அசத்திய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

Publish by: --- Photo :


கோவையில் இளைஞர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அட்டகாசமாகப் பந்துவீசி அசத்தினார்.அன்றாடம் காலையில் நடை மற்றும் உடற் பயிற்சி மேற்கொள்ளும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவைப்புதூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரி வளாகத்தி பயிற்சி மேற்கொண்டார்.

அப்போது,அங்கு பத்திரிக்கையாளர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட எஸ்.பி. வேலுமணி , கிரிக்கெட் மீதான அதீத ஆர்வத்தால் தானும் களத்தில் இறங்கினார். ஆர்வத்துடனும், உத்வேகத்துடனும் அவர் பந்துவீசி அசத்தினார்.

இதை அடுத்து கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் சீருடை வழங்கி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உற்சாகப்படுத்தினார்.இச்சம்பவம் அப்பகுதியில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியது.


Leave a Reply