இளம் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி நிறைவு விழா

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி நிறைவு பெற்று இளம் ராணுவ வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். குன்னூரில் வெலிங்டன் ராணுவ முகாமில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி வழங்கப்படுகிறது.

 

இதனையடுத்து 46 வாரங்கள் பயிற்சி பெற்ற 274 ராணுவ வீரர்களுக்கு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் பயிற்சி நிறைவு பெற்ற இளம் ராணுவ வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் ராணுவ வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பும் நடைபெற்றது.


Leave a Reply