திருச்சியில் போலி மதுபானம் விற்ற 4 பேர் கைது

Publish by: --- Photo :


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே போலி மதுபானம் தயாரித்தது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மணப்பாறை அடுத்துள்ள வெள்ளிவாடி கிராமத்தில் வாடகை வீடு எடுத்து சிலர் போலி மதுபானம் தயாரித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

அங்கு சென்று சோதனை செய்த போது போலி மதுபானம் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வராஜ், அறிவழகன் ,அண்ணாமலை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து போலி போலி மதுபானம், போலி ஸ்டிக்கர் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் வீட்டின் உரிமையாளர் மருதையும் கைது செய்தனர்.


Leave a Reply