வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், சீமான் நீதிமன்றத்தில் ஆஜர்

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். கடந்த 2009 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.

 

அப்போது விடுதலை புலிகளுக்கு ஆதரவாக , வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 11 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது சீமான் நேரில் ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் திருநெல்வேலி நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார். கொள்ளையடிக்கப்படுபவர்களின் ஆட்சி கட்டிலில் அமர்ந்து இருக்கும் போது தன்னுடைய இனத்துக்காக பேசியது, தன்மீது வழக்கு பதிவு செய்யபட்டிருப்பதாக விமர்சித்தார்.


Leave a Reply