விவசாயிகளுக்கு மோடி நேரடியாக எழுதிய கடிதம்!தென்மேற்கு பருவ மழை நீரை சேமிக்க நடவடிக்கை தேவை

தென்மேற்கு பருவமழை நீரை சேமிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிராமங்களின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி நேரடியாக கடிதங்களை எழுதியுள்ளார். பிரதமரின் கையெழுத்திட்ட கடிதங்கள் மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக கிராமத் தலைவர்களிடம் வழங்கப்பட்டுள்ளன.

 

அந்த கடிதங்களில் மழை நீரை முழுமையாக சேமிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தியுள்ள பிரதமர், தடுப்பணைகள், குளங்களை கட்ட அதிகாரிகளுடன் ஒத்துழைத்து செயல்படவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

கிராமங்களில் ஆலோசனை கூட்டம் நடத்தி தண்ணீரை சேமிக்க புதிய யோசனைகளை பெற்று செயல்படவும் வலியுறுத்தியுள்ளார். பிரதமரே நேரடியாக கடிதம் எழுதியிருப்பது பெருமைக்குரியதாக கருதப்பட்டு பல்வேறு கிராமங்களில் பணிகள் உற்சாகமாக தொடங்கப்பட்டு இருக்கிறது.


Leave a Reply