ஜூன் 14 – உலக ரத்த தான தினம்

மனித நேயத்தின் உச்ச்கட்ட வெளிப்பாடாக விளங்குகிறது ரத்த தானம் . இது குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் , ரத்த தானம் செய்பவர்களை கௌரவிக்கும் வகையிலும் ஆண்டு தோறும்  ஜூன் 14 ஆம் தேதி உலக ரத்த தான தினம் கடைபிடிக்கப்படுகிறது. ரத்தத்தில் ஏ, பி மற்றும் ஓ ஆகிய பிரிவுகளில் கண்டுபிடித்த கார்ல் லேண்ட் ஸ்டெய்னர் பிறந்த நாளே ரத்த தான தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

 

தொடர்ந்து ரத்த தானம் செய்தால் எந்த நோயுமே இன்றி நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ முடியும் என்கின்றனர் ரத்த தானம் செய்கின்றவர்கள். ஆரோக்கியமான ஒருவரது உடலில் 5முதல் 6 லிட்டர் ரத்தம் உள்ளது.  அதிலிருந்து வெறும் 300 முதல் 350 மில்லி லிட்டர் மட்டுமே தானமாக பெறப்படுகிறது.

 

3 மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம். விபத்துகள் அறுவை சிகிச்சைகள் ,நோய்கள் உள்ளிட்ட பல காரணங்களுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ரத்தத்தை பெற்று அதனை பாதுகாப்பாக சேமித்து வைத்து தேவையான நேரத்தில் தரும் பணியை ரத்த வங்கிகள் செய்து வருகின்றனர்.

 

ரத்தம் தேவைப்படுவோரில் பலருக்கு முழு ரத்தமும் தேவைப்படுவதில்லை. ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும் நோயாளிகளுக்கு சிவப்பணுக்கள் மட்டுமே தேவைப்படும். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா செல்கள் மட்டுமே தேவைப்படும். இதற்கு ஏற்றார் போல் ரத்த மாதிரிகளை சோதனை செய்ய நவீன முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


Leave a Reply