வாரணாசியில் அன்றாட போக்குவரத்துக்கு கேபிள் கார் திட்டம்

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் அன்றாட பொது போக்குவரத்திற்கு கேபிள் கார் பயன்படுத்தும் திட்டத்தை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கோவில் நகரமான வாரணாசியில் சாலையில் மாடுகள் குறுக்கும் நெடுக்குமாக நடப்பது சுற்றுலா வாகனங்கள், பேருந்துகள் என அவ்வப்போது வாகன ஓட்டிகளுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது.

 

இதனை கருத்தில் கொண்டு கேபிள் கார் சேவையை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பயணத்திற்கு ஆகும் செலவை விட 70 சதவீதம் குறைந்த செலவே கேபிள் கார் பயணத்திற்கு ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஒரு கேபிள் காரில் 80பேர் வீதம் ஒரு மணி நேரத்திற்கு 12,000 பேர் இதில் பயணிக்கலாம் என கணிக்கப்படுகிறது.

 

அடிக்கடி கேபிள் கார் வரும் என்பதால் பயணிகள் காத்திருக்கும் அவசியமும் இல்லை. இந்தியாவில் பெரும்பாலும் சுற்றுலா தளங்களில் மட்டுமே கேபிள் கார் வசதி உள்ள நிலையில் டேராடூன், விசாகப்பட்டினம், கான்பூர் ஆகிய நகரங்களிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.


Leave a Reply