தண்ணீர் பிரச்சனையால் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

Publish by: --- Photo :


சென்னையில் சபாநாயகர் தனபாலின் கார் ஓட்டுனர் குடிநீர் பிரச்சனையில் இளம் பெண்ணை கத்தியால் குத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபாநாயகர் தனபாலின் கார் ஓட்டுனர் ஆதி மூலராமகிரிஷ்ணன் பல்லாவரம் அடுத்த ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கடும் தண்ணீர் பிரச்சனை இருந்து வரும் நிலையில் அதே குடியிருப்பில் வசிக்கும் மோகன் என்பவர் மோட்டார் போட்டு தண்ணீர் ஏற்றியுள்ளார்.

 

இதனால் மோகன் மீது ஆத்திரம் கொண்டு ஆதிமூலராமகிரிஷ்ணன் அவரை தாக்கியுள்ளார். மேலும் மோகன் மனைவி சுபாஷினியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சசுபாஷினி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மோகன் அளித்த புகாரை தொடர்ந்து ஆதிமூலராமகிரிஷ்ணனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply