சீனாவில் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 49 பேர் உயிரிழந்தனர். தெற்கு பகுதியில் உள்ள குவாங்க்ஷி பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளது. 7 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பான வாழக்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் ஏராளமான கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அடித்துச் செல்லபட்டன. மேலும் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவும் ஏற்பட்டது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 8 மாகாணங்களில் 45 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.49 பேர் உயிரிழந்ததாகவும், 14 பேர் மாயமாகியுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள் :
சென்னையில் ஓட்டல்கள் மூடும் அபாயம்..!
அடுப்பங்கரையிலும் எதிரொலிக்கும் சர்வதேச போர் பதற்றம் -சு.வெங்கடேசன் எம்.பி
எகிறிய தங்கம் விலை..!
எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க நாடு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை..!
தந்தை மறைவுக்குப் பின் அதிகாரத்தைக் கைப்பற்றிய மொஜ்தபா கமேனி..!
டி20 உலக கோப்பை இறுதிப் போட்டி: இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை!






