ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணை வருகிற 20 ஆம் தேதி நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்புராயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது நீதிபதிகள் விசாரணை நடத்தினர். நீதிமன்றத்தில் ஆஜரான மதிமுக பொது செயலாளர் வைகோ ஸ்டெர்லைட் ஆலை தேவை இல்லையென 23 ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்துவதாக தெரிவித்தார்.

 

அரசு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஆலைக்கு ஆதரவாக வருபவர்கள் வணிக நோக்கத்திற்காக மட்டும் தங்களை வழக்கில் இணைக்க கோருவதாக தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ , பாத்திமா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்று வழக்கில் அவர்களையும் ஒரு தரப்பாக வாதியாக சேர்க்க உத்தரவிட்டனர்.

 

ஆலைக்கு ஆதரவாகவழக்கில் இணைக்க கோரியவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள். வழக்கின் விசாரணையை வருகின்ற 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


Leave a Reply