மாடியில் உறங்கி கொண்டிருந்த பெண்ணின் 3 சவரன் தாலி கொள்ளை

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே மாடியில் உறங்கி கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 3 சவரன் தாலி செய்னை கயவர்கள் பறித்து சென்றனர். தண்டலத்தை சேர்ந்த மகாலிங்கம் தனது மனைவி பரிமலாவுடன் இரவு மொட்டை மாடியில் உறங்கியுள்ளார்.

 

அப்போது திடீரென மாடிக்கு வந்த மர்ம நபர்கள் சிலர் பரிமலாவின் கழுத்தில் இருந்த 3 பௌன் சவரன் தாலி செய்னை லாவகமாக பறித்ததோடு தலையணைக்கு அடியில் வைத்திருந்த சாவியையும் எடுத்து சென்று வீட்டின் அலமாரியில் இருந்த 3000 பணம் மற்றும் வெள்ளி கொழுசை கொள்ளை அடித்து சென்றனர்.

 

மகாலிங்கம் தனது மனைவியுடன் மாடியில் உறங்குவதை அறிந்து வைத்து கொள்ளை அடித்ததன் மூலம் கயவர்கள் பல நாள் நோட்டமிட்டு கொள்ளை அடித்திருக்கலாம் என சந்தேகிக்கும் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Leave a Reply