அதிமுக ஆலோசனை கூட்டத்தில் 6 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்த நிர்வாகிகளுக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பு ஏற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரை வழிமொழியும் வாய்ப்பினை அதிமுகவிற்கு அளித்ததற்கு கூட்டத்தில் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது.

 

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் சிறப்புடன் பணியாற்றி மகத்தான வெற்றி பெற கூட்டத்தில் உறுதி ஏற்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா ஆகியோரின் வழியில் மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு தமிழக மக்கள் இன்பமாய் வாழ்ந்திட உறுதி ஏற்பது என்றும் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Leave a Reply