ஏழ்மையாக இருந்து விண்வெளி சாதனையாளராக மாறிய பெண்!

Publish by: ஜாஸ்மின் --- Photo :


தேனியைச் சேர்ந்த மாணவி ஒருவர் விண்வெளி ஆய்வு பயிற்ச்சிக்கு தேர்வு ஆகியிருக்கிறார். பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையிலும் லட்சியத்தின் மீதான தீரா பற்றினாலும் பெற்றோரின் ஆதரவாலும் சாதனை பெண்ணாக மாறியிருக்கிறார்.

 

தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்த தாமோதரன் அமுதா தம்பதியின் மகள் உதயகீர்த்திகா. எளிய குடும்பத்தில் பிறந்தபோதும் திறம்பட பயின்ற உதயகீர்த்திகாவுக்கு விண்வெளி ஆய்வு குறித்த படிப்பின் மீது மிகுந்த ஆர்வம். அப்துல்கலாம் போன்றோர்களை முன்னோடிகளாக எடுத்துக்கொண்டு 2012 ஆம் ஆண்டு இஸ்ரோ நடத்திய விண்வெளி ஆராய்ச்சி கட்டூரை போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு பெற்றுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக விண்வெளி ஆராய்ச்சி குறித்த படிப்பை பயில வேண்டும் என்பதை லட்சியமாக்கிகொண்டார். பொருளாதார நிலை பின்னுக்கு இலுத்தபோதும் உதயகீர்த்திகாவை உக்ரைன் நாட்டில் உள்ள விமான படை கல்லூரியில் விமான பராமரிப்பு மற்றும் தொழில் நுட்ப பிரிவில் சேர்த்துள்ளார் தந்தை தாமோதரன்.

 

நான்கு ஆண்டு படிப்பை 92.5 சதவீதம் மதிப்பெண்களுடன் நிறைவு செய்த உதயகீர்த்திகா போலாந்து நாட்டின் விண்வெளி ஆராய்ச்சிசிக்கான பயிற்சிக்கு தேர்வு ஆகியுள்ளார். பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் தனது மகளை விண்வெளி ஆராய்ச்சிக்கான தகுதிக்கு கொண்டு வந்துள்ளதாக கூறுகிறார் தாய் அமுதா.


Leave a Reply