கொடிகாத்த திருப்பூர் குமரன் நினைவுப் பூங்கா உதயம்: அரசு கல்லூரி மாணவர்கள் அசத்தல்!

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு 2 மற்றும் சிக்கண்ணா நடை பயிற்சியாளர் சங்கம் இணைந்து 05.06.19 உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, கல்லூரி வளாகத்தில் கொடி காத்த குமரனின் நினைவாக திருப்பூர் குமரன் நினைவு பூங்கா வை நிறுவி அதில் 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை (புங்கன், வேம்பு) நடவு செய்யும் நிகழ்வு நடை பெற்றது.

முன்னதாக ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்புரையை நிகழ்த்தினார். மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் மரங்கன்றுகளை நடவு செய்து விழாவினை துவக்கி வைத்தார். அவர் கூறுகையில்- புவி வெப்பமாவதை தடுப்பதற்கு பலரும் முயற்சி எடுத்துக் கொண்டுவரும் இந்த வேளையில் உலக சுற்றுச் சூழல் தினத்தன்று கொடி காத்த திருப்பூர் குமரனின் நினைவு பூங்காவை நிறுவி அதில் மரக்கன்றுகளை நடவு செய்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, மாணவர்கள் இதோடு விட்டு விடாமல் இப் பூங்காவில் உள்ள மரங்களை பராமரிக்க வேண்டும்.

 

மரங்களை நேசிப்பவர்கள் நல்ல சுவாச காற்றை பெருவார்கள். கல்லூரியில் பசுமையை ஏற்படுத்த எவ்வித உதவி கேட்டாலும் மாநகராட்சி தயாராக இருக்கிறது, பிளாஸ்டிக் பயன் பாட்டை தடுப்பதற்காக அலகு 2 மாணவர்கள் கலை நிகழ்ச்சி மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கி வருகிறார்கள், மாணவர்களின் பங்கு மிக முக்கியம் என்றும் கூறினார்.

இதனைத்தொடா்ந்து அனைவரும் மரங்களை வளர்ப்போம் – இயற்கையை காப்போம் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். மாணவ தலைவர்கள் பேரரசு, சந்தோஷ் தலைமையில் 25 மாணவர்கள் மரம் நடும் விழாவில் கலந்து கொண்டு மரங்களை நடவு செய்தனர். சுகாதார அலுவலர் முருகன், சிக்கண்ணா கல்லூரி முன்னாள் மாணவ சங்க பிரதிநிதி கண்ணன், டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த் , சிவா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக நடை பயிற்சியாளர் சங்க பிரதிநிதி ராஜேந்திரன் நன்றியுரை கூறினார். நிகழ்ச்சினை கல்லூரி பொறுப்பு முதல்வர் புஷ்பலதா ஏற்பாடு செய்திருந்தார்.


Leave a Reply