கேரளாவில் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் 23 வயது இளைஞர் ஒருவர் எர்னாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.எர்னாகுளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பயின்று வருகிறார். அவர் சக மாணவர் 23 பேருடன் திருச்சூற்கு கல்வி பயில சென்றதாக கூறப்படுகிறது.
அங்கு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து நிபா வைரஸ்க்கு ஆளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தற்போது எர்னாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவருடன் சென்ற 22 மாணவர்களுக்கும் மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளனர். இந்நிலையில் அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை புனேவில் உள்ள தேசிய வைராலஜி என்ற மருத்துவ நிறுவனம் உறுதி செய்யும் என்றும் பொது மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று கேரள அரசு கேட்டு கொண்டுள்ளது.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தலைமையில் சுகாதாரத்துறை செயலாளர் மாவட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்டோருடன் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.






