திருமண ஆசை காட்டி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர்

தேனி அருகே கூடலூர் கே.கே.காலனியை சேர்ந்தவர் கிஷோர்பாண்டி (வயது21). இவருக்கும் 19வயது இளம்பெண்ணுக்கும் பள்ளி பருவத்தில் இருந்தே காதல் இருந்து வந்துள்ளது. தற்போது அந்த பெண் பெங்களூரில் நர்சிங் படித்து வருகிறார்.

 

கிஷோர்பாண்டி சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்கிறார். அந்த இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.

 

மேலும் அவரை சென்னைக்கு அழைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது திருமணம் செய்து கொள்ளும்படி இளம்பெண் கிஷோர்பாண்டியிடம் வற்புறுத்தி உள்ளார்.

 

ஆனால் கிஷோர்பாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து கூடலூர் வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கிஷோர்பாண்டி, அவரது தந்தை பாண்டியன், தாய் ஈஸ்வரி மற்றும் ஜெயக்குமார் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Leave a Reply