சிறப்பு சலுகைகள் என்ற அறிவிப்புடன் போலி டிராவல்: ஏஜென்சிகள் மோசடி!

சிறப்பு சலுகை என்ற பெயரில் டிராவல் ஏஜென்சிகள் மோசடியில் ஈடுபடுவதாக டிராவல் ஏஜென்சி அசோசியேஷன் கோவை சார்பில் அதன் தலைவர் கிருஷ்ணராஜ் மாவட்ட துணை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

 

இதுகுறித்து,அவர் கூறுகையில் சமீப காலமாக திருப்பூர், கோவை நகரங்களிலும் மற்றும் சில மாவட்டங்களில் டிராவல் ஏஜென்சி என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு வெளியூர் மற்றும் வெளிநாடு சுற்றுலா அழைத்துச்செல்லாமல் பொது மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.

 டிராவல் ஏஜென்சி அசோசியேசன் தலைவா் கிருஷ்ணராஜ் அளிக்கும் பேட்டி
டிராவல் ஏஜென்சி அசோசியேசன் தலைவா் கிருஷ்ணராஜ் அளிக்கும் பேட்டி

மேலும்,இதுபோல் போலியான டிராவல் ஏஜென்சிகள் பல முன்கூட்டியே திட்டமிட்டு கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் பொது மக்களை மிக சுலபமாக ஏமாற்றி விடுகிறார்கள்.இதன் மூலம் பொதுமக்கள் பலர் தங்கள் பணத்தைத் தொலைத்து கொண்டிருக்கிறார்கள். வெளிநாடு சுற்றுலா செல்லும் மோகத்தில் விலை குறைந்த போலியான சலுகைகளை பார்த்து அதில் பணம்  கட்டி ஏமாறுகிறார்கள்.

 

இதுபோல் மேலும் நடைபெறாமல் இருக்க  அரசு அங்கீகாரம் பெற்ற ஜிஎஸ்டி எண்ணுடன் கூடிய டிராவல் ஏஜென்சிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.


Leave a Reply