திருப்பூரில் ஹை டெக் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது

திருப்பூரில் மசாஜ் சென்டர் நடத்துவதாக கூறி வாடகைக்கு வீடு எடுத்துஹைடெக் பாலியல் தொழில் நடத்திய 4 பெண்களை போலீசார் மீட்டனர்.திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரி கோவில் வீதியில் ஒரு வீட்டில் பெண்களைவைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீசாற்கு தகவல் கிடைத்தது. அங்கு திடீர் சோதனை நடத்தினர். அப்போது போலீசார் அங்கு 4 ஸ்வைப்பிங் மேஸினைகைப்பற்றினர்.

 

அப்போது அங்கிருந்த கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ரோஹித்,கோலிக்கோட்டையை சேர்ந்த முபாஷீர் ஆகியோரிடம் மேற்கொள்ளபட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

 

திருப்பூர் காலேஜ் ரோடு ஸ்டேன்ஸ் தெருவில் தேவி என்பவர் மசாஜ் சென்டர் நடத்தி வருவதும் அதன் நிர்வாகத்தை ரோஹித்தும், முபாஷீரூம் கவனித்து வந்ததும் தெரிய வந்தது. அங்கு தொழில் அதிபர்கள்,கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் வந்ததால் அவர்களுடன் பழக்கம் ஏற்படுத்தி கொண்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்த திட்டமிட்டதும் தெரிய வந்தது.

 

அந்த வகையில்கொங்கணகிரி வீதியில் வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழிலை மேற்கொண்டு வரும்போது போலீசாரிடம் சிக்கினார்.மீட்கப்பட்ட பெண்களில்,இருவர் கேரளாவையும் ஒருவர் கர்நாடகத்தையும்,ஒருவர்தமிழகத்தையும் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.ரோஹித்,முபாஷீர் ஆகியோரை
கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருப்பூரில் சிக்கிய மூன்று பெண்களுமே ஹைடெக் விபச்சாரிகள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply