குன்னூர் மலைப்பாதையில் மரம் விழுந்து டூவிலரில் வந்த ராணுவ வீரர் பலி…

குன்னூர் மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தின் மீது மரம் விழுந்ததில் இராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நேற்று இரவு கனமழை பெய்தது.இதில் இன்று காலையில் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே சரிவான பகுதியில் இருந்த பெரிய காட்டு மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது. அதே நேரத்தில் சாலையில் கடந்து சென்ற வேலூர் விஜயகுமார் என்பவர் ஓட்டி வந்த கார்மீது விழுந்ததில் கார் நொறுங்கியது.

 

இதனை அடுத்து மரத்தின் ஒரு பகுதி காரின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்துக் கொண்டிருந்த கோவை இராணுவ முகாமில் மாரத்தான் பயிற்சி மேற்கொண்டு வரும் கேரளா மாநிலம் பாலக்காட்டை அடுத்துள்ள முண்டுரை சேர்ந்த பிரதீப் மீது மரம் விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். அவர் பின்னால் அமர்ந்து வந்த அவருடைய சகோதரன் பிரதீஸ் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இவர்கள் இருவரும் இரட்டையர்கள். உடனடியாக அவ்வழியாக வந்த வாகனத்தில் பிரதீப்பை ஏற்றிகொண்டு குன்னூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 

இது குறித்து வெலிங்டன் போலீசார் விசாரித்ததில் இராணுவ வீரர்கள் பிரதீஸ் கடன் சம்பந்தமாக விசாரித்து செல்ல குன்னூர் வெலிங்டன் இராணுவ முகாமிற்கு வந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தெரிய வந்தது.இது குறித்து வழக்குப்பதிவு செய்த வெலிங்க்டன் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply