சிறுமி கொலை வழக்கு பாலோ-அப் ! உல்லாத்துக்கு ஆசைப்பட்டு ஒரே ஒரு மிஸ்டு கால் வாழ்க்கையை அழிந்தது!

ஒரே ஒரு மிஸ்டு கால் வாழ்க்கையை தொலைத்தது.சரவணம்பட்டி சிறுமி கொலை வழக்கில் அதிரடியாக தாய் கைது. கள்ளக் காதலனை தேடி வருகிறது போலீஸ்.

 

கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள கரட்டு மேடு பகுதியில் முருகன் கோவில் உள்ளது.இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தினசரி காலை,மாலை வேளைகளில் நடைப்பயிற்சி செய்து வருவது வழக்கம்.வழக்கம் போல் நேற்றும் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வாக்கிங் சென்ற பொழுது கொலை செய்யப்பட்ட சிறுமியின் சடலம் முட்புதரில் கிடப்பதை கண்ட பொதுமக்கள் சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார் விரைந்து வந்து சிறுமியின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சேர்த்தனர்.மேலும்,சிறுமி கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் விசாரணையில் இறந்து கிடந்த சிறுமி கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த பால்ராஜ்-ரூபிணி தம்பதியின் மகளாவார்.

 

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளதும்,கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தம்பதியர் பிரிந்து வாழ்ந்து வருவதும்,சிறுமி தேவிஸ்ரீக்கு 3 வயது என்பதும் காவல் துறையினரின் தீவிர விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இந்த நிலையில் தமிழ்ச்செல்வன் என்பவனுடன் ரூபிணிக்கு மிஸ்டு கால் மூலம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவிக்கும் அளவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் காரமடையை விட்டுவிட்டு சரவணம்பட்டிக்கு குடிபெயர்ந்துள்ளார் ரூபிணி.

 

மேலும்,இவர்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக சிறுமி தேவிஸ்ரீ இருந்துள்ளதாக கூறப்படுகிறது.இதனால் ஆவேசமடைந்த தமிழ்ச்செல்வன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியை தனது தாய் வீட்டில் கொண்டு சென்று விட்டு வருவதாக கூறி சிறுமியை அழைத்துச்சென்றவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த ரூபிணி குழந்தையை காணாமல் தேடி வந்த நிலையில் தான் சிறுமி கொலை செய்யப்பட்டு முட்புதரில் மீட்கப்பட்ட சம்பவம் தெரிய வந்துள்ளது.

 

காவல் துறையினரின் கிடுக்குப்பிடி விசாரணையில் தான் ரூபிணி-தமிழ்ச்செல்வன் ரகசிய முறைகெட்ட தவறான வாழ்க்கை குறித்த தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

இந்த நிலையில் ரூபிணியை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும்,தலைமறைவாக உள்ள தமிழ்ச்செல்வனை 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

மிஸ்டு கால் மூலம் ஏற்பட்ட தவறான பழக்கம் குழந்தையின் சாவிற்கு காரணமாக அமைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஏற்கனவே,துடியலூர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் இதுபோன்ற சம்பவம் கோவையில் நடந்திருப்பது பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply