இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தொண்டி – புதுக்குடி பகுதியில் தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காமாட்சிநாதன் மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு சந்தேகப்படும் வகையில் பல்சர் பைக்கில் நின்று கொண்டிருந்த வாலிபரைப் பிடித்து விசாரணை செய்தனர்.
இந்நிலையில் அந்த நபர் தொண்டி புதுக்குடியைச் சேர்ந்த வடுகையன் மகன் துரைப்பாண்டி (எ) கார்த்திக் (26) என்பதும், தொண்டி – புதுக்குடி சுனாமி குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாகவும் தெரிய வந்துள்ளது. அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்து போலீசாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தொண்டி பகுதியில் 30 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக இராமநாதபுரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.