கோவை மீன் சந்தையில் பட்டப்பகலில் செயின் பறிப்பு: சிசிடிவி காட்சியை கைப்பற்றி போலீஸ் விசாரணை

கோவையில் பரபரப்பாக செயல்பட்டு வரும் உக்கடம் மீன் மார்க்கெட் பகுதியில் பட்டப்பகலில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை உக்கடம் பகுதியில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.எப்போதும் பரபரப்பாக செயல்பட்டு வரும் இப்பகுதியில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சிதம் என்பவர் மீன் வாங்க வந்துள்ளார்.

 

அப்போது,மர்ம நபர் ஒருவர் ரஞ்சிதத்தின் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்க செயினை பறித்து கொண்டு ஓடி தப்பியுள்ளார்.இந்த காட்சி அங்கிருந்த ஒரு கடையில் இருந்த சி சி டிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அதில் செயினை பறித்துக்கொண்டு ஒடி தப்பிய நபரின் முகம் தெளிவாக தெரிகிறது.இதனை கைப்பற்றிய பெரிய கடைவீதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தும், தனிப்படை அமைத்தும் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

 

எப்பொழுதும் பரபரப்பாக செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட் பகுதியில் நடந்த இந்த துணிகர செயின் பறிப்பு சம்பவம் கோவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Reply