சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் திருப்பரங்குன்றம் தொகுதி சற்று வித்தியாசமானது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த தொகுதி 2-வது முறையாக இடைத்தேர்தலை சந்தித்துள்ளது.

 

இந்நிலையில் இந்த தொகுதிகளில் காலை 6 மணி அளவில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கி சரிபார்க்கும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கும். ஏற்கனவே அங்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில் இடைத்தேர்தல் நடப்பதால், வாக்காளர்களின் நடுவிரலில் அழியாத மை வைக்கப்படும்.

 

இடைத்தேர்தல் நடக்கவுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மொத்தம் 5,508 தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் ஒருவர் என்ற வீதத்தில் 1,364 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Leave a Reply