நாகையில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்தல் !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.

 

நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் மாதானம் பகுதியிலிருந்து தரங்கம்பாடி வட்டம் மேமாத்தூர் கிராமத்தில் இயற்கை எரிவாயுவை குழாய் வழியாக கொண்டு வந்து சேமிக்கும் திட்டத்தை கெயில் நிறுவனம் மேற் கொண்டு வருகிறது விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலங்களில் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்களை அழித்து குழாய் பதிக்கும் பணியில் கெயில் நிர்வாகம் ஈடுபட்டு வருவதை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது.

 

ஏற்கனவே, கொச்சியிலிருந்து மங்களூர் வரை தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதை முன்னாள் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்றும், போட்ட குழாய்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டார். என்பது குறிப்பிடதக்கது.

 

எனவே, எரிவாயு குழாய் பதிக்கும் இத்திட்டப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் மெனவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் இரணியன் உள்ளிட்ட எட்டு பேர் மீது ஜாமினில் வெளியில் வர முடியாத கடுமையான சட்டபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கபட்டுள்ள எட்டு பேரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் மெனவும் அழிக்கப்பட்டள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.


Leave a Reply