16 கோடி ரூபாய்க்கும் மேல் ஊதியம் பெற்ற தலைமை செயல் அதிகாரி யாா் தெரியுமா..

முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் கடந்த நிதியாண்டில் 16 கோடி ரூபாய்க்கும் மேல் ஊதியம் பெற்றுள்ளராம்.

 

இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது கிட்டதட்ட 28சதவிகிதம் அதிகமாகும். இந்த மொத்த சம்பளத்தில் 1.15 கோடி ரூபாய் இழப்பீடாகவும், அதோடு ஊக்கத் தொகையாக 1.26 கோடி ரூபாயாகவும், 13 கோடி ரூபாய் கமிஷனாகவும், 60 லட்சம் ரூபாய் செலவு தொகையாகவும், இதெல்லாம் சேர்த்து 16.02 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

 

இதில் கடந்த 2017 – 2018ல் அவரது இழப்பீடு 12.49 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது. இதுவே டி.சி.எஸ் தலைமை நிர்வாக இயக்குநரான கணபதி சுப்பிரமணியம், கடந்த நிதியாண்டில் 11.61 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டு 9.29 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.

 

இதே டி.சிஎஸ் தலைமை நிதி அதிகாரி ராமகிருஷ்ணன் அதிகாரியின் சம்பள தொகை ரூ.4.13 கோடியாக இருந்தது. மும்பை அடிப்படையாக கொண்ட இந்த நிறுவனத்தின் சராசரி வருவாயில் 6% அதிகரித்துள்ளது. இதையடுத்து மொத்த வருவாய் 7.2% சதவிகிதமாக அதிகரித்துள்ளது. டி.சி.எஸ் நிறுவனம் இந்தியாவுக்கு வெளியே ஊழியர்களுக்கு 2 – 5% வரை ஊதிய உயர்வு வழங்கியுள்ளது.

 

இந்த ஊதிய உயர்வு அந்தந்த நாட்டின் சந்தை மதிப்பினை பொறுத்தும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது டி.சி.எஸ் நிறுவனம். இதுவே கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையின் சம்பளம் கடந்த 2016லேயே 200 மில்லியன் டாலர்களாகும்.

 

இதே விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியின் சம்பளம் கடந்த 2018ம் நிதியாண்டில் அபிதாலி இழப்பீடு 34% உயர்ந்து 18.2 கோடியாக உயர்ந்திருந்தது கவனிக்கதக்கது. அதே சமயம் ராஜேஷ் கோபிநாதனின் சம்பளம் 12 கோடி ரூபாயாக இருந்தது.


Leave a Reply