இராமநாதபுரம் மாவட்டம். திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்தில் போலீஸ்ஏட்டு ஜான் வயது – 35. என்பவா் இன்று குடித்துவிட்டு பணிபுரிந்துள்ளார்.சிறிது நேரத்தில் உள்ளே சென்ற சரக்கு வேலையைக் காட்ட ஆரம்பித்தது. குடியால் மதிகெட்ட போலீஸ்காரர் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.அராஜகம் எல்லை மீறியது. சக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, காவல் நிலையத்தில் உள்ள வயர்லெஸ் கருவியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.
இதனால் போலீஸ் ஏட்டு ஜானை இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்து, பின்னா் ஜாமினில் விடுவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.