ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினருடான கடும் சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள தலிபோரா பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதிக்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. இந்த துப்பாக்கி சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர் தரப்பில், ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். அப்பகுதியில், பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகள் :
நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்..மது போதையில் போலீஸ் செய்த செயல்..!
காணாமல் போன முதலமைச்சர் சமோசா..விசாரணை..!
மகளிர் உதவித்தொகை ரூ.2,100: பாஜக வாக்குறுதி
ஊழல் மட்டுமே செய்யும் ஆட்சி தேவையா? : மோடி
காங்.,க்கு மக்கள் தோல்வியை பரிசளிப்பார்கள்: அமித் ஷா
டெஸ்ட் டிரைவ் செய்வதாக கூறி பைக்கை திருடி சென்ற இளைஞர்..!